தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சிதம்பரத்தில் பிரதமரின் மக்கள் நிதிதிட்ட தொடக்கவிழா

சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் பிரதமரின் திட்டமான, மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட தொடக்கவிழா தெற்குவீதி வங்கி கிளை அலுவலகத்திலும், சிதம்பரம்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2014, 3:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் பிரதமரின் திட்டமான, மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட தொடக்கவிழா தெற்குவீதி வங்கி கிளை அலுவலகத்திலும், சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்திலும் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தை சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் கே.கண்ணன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு புதிய கணக்கு புத்தகத்தை வழங்கி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். இத்திட்டத்தில் கீழ்சிறுகாலுர், அய்யனூர், பண்ணப்பட்டு, செங்கல்மேடு, தெம்மூர், சி.வீரசோழகன் மற்றும் கோவிலாம்பூண்டி கிராம மக்கள் வங்கி கணக்கு தொடங்கி பயனடைந்தனர். மேற்கண்ட கிராம மக்களுக்கு அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் பங்கேற்று பயனாளிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் வங்கி அதிகாரிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், கே.கயல்விழி, எஸ்.சுவீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் புதுதில்லியில் நடைபெற்ற ஜன்தன் திட்ட தொடக்க பேசிய விழாவில் பாரத பிரதமர் உரையை காணொலி மூலம் நேரடியாக நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.