இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, பெரியகுப்பம் கடற்கரை, பழைய நெய்வேலி ஏரி ஆகிய நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் மேள், தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 75 சதவீத விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டது. மீதமுள்ள செப்.2-ம் தேதி 25 சதவீத சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம், சிதம்பரம் கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.