தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சிதம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பிஇ மாணவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சுந்தரம்சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவரது மகன் ரஞ்சித் (24). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2009-2013ல் பிஇ

News image
Updated On :31 ஆகஸ்ட் 2014, 10:54 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலையில் படித்து முடித்த பிஇ மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சுந்தரம்சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவரது மகன் ரஞ்சித் (24). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2009-2013ல் பிஇ எல்க்டிரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். பின்னர் வேலை கேட்டு அலைந்த போது இவரது சான்றிதழ்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. சான்றிதழ் காணாமல் போனது குறித்து வீட்டிற்கு தெரிவிக்காமல், சான்றிதழ்களை தேடி மாணவர் ரஞ்சித் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் சரகத்தில் உள்ள உசுப்பூர் ரயில்கேட் அருகே திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.