பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு. 22 நாள் வசூல் ரூ.1.48 கோடியை தாண்டியது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் வந்த பக்தர்கள் வரவால் உண்டியல்கள் கடந்த 22 நாட்களில் நிரம்பிது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை மலைக்கோயில்


பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 22 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.48 கோடியை தாண்டியது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் வந்த பக்தர்கள் வரவால் உண்டியல்கள் கடந்த 22 நாட்களில் நிரம்பிது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 525 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் ஆயிரத்து 546 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 600 கிராமும் கிடைத்தன.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 699 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், முந்திரி, ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கத்தில், பல்வேறு வகையான கற்கள் பதிக்கப்பட்ட தங்கவேல் ஒன்று 100 பவுன் எடையில் இருந்தது. இந்த தங்கவேலும், சுமார் 1,335 கிராம் எடையிலான வெள்ளிக்கவசமும் பலரையும் திரும்பிப் பார்க்கும்படியாக செய்யப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், திருக்கோயில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...