தமிழ்நாட்டின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனி அருள்மிகு தண்டாயுதபாமி சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது சராசரியாக 25 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் நிலை உள்ளது. இந்த உண்டியல் எண்ணிக்கையின் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், வங்கி ஊழியர்கள் என சுமார் ஐநூறு பேர் ஈடுபடுவது வழக்கம். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறைகள் சல்லடைகள் மூலம் 25பைசா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என பிரிக்கப்படுகிறது. காணிக்கையில் வரும் சில்லறைகளே பல இலட்சம் ரூபாயைத் தாண்டும். இந்த சில்லறைகள் தராசுகளில் எடை போடப்பட்டு இரண்டாயிரம், ஐந்தாயிரம், நான்காயிரம் என பிரித்து சாக்குப்பையால் கட்டப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது.