காதை கடித்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு
பழனி அருகே கிருஷ்ணாபுரம் 5வது வார்டை சேர்ந்தவர் கடையதேவர் மகன் முத்தையன்(30). இவர் தெருவில் பஞ்சாயத்து சார்பில் போடப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு முத்தையனின்


பழனி அருகே ஆணின் காதை கடித்து கொலைமிரட்டல் விடுத்தவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி அருகே கிருஷ்ணாபுரம் 5வது வார்டை சேர்ந்தவர் கடையதேவர் மகன் முத்தையன்(30). இவர் தெருவில் பஞ்சாயத்து சார்பில் போடப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு முத்தையனின் அக்கா சாந்தி தண்ணீர் பிடிக்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த ஜெயராம் மகன் சிவக்குமார்(32) என்பவர் மனைவி தண்ணீர் பிடிக்கக் கூடாது என கூறி தகராறு செய்துள்ளார். இதனால் வாய்சண்டை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை தண்ணீர் எடுத்து விடும் வாட்டர்மேன் வந்த போது முத்தையன் கூறியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த சிவக்குமார், அவரது தந்தை ஜெயராம்(65), சகோதரர் இளங்கோவன்(45) ஆகியோர் முத்தையனுடன் தகராறு செய்து கல்லால் அடித்து தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், சிவக்குமார் முத்தையனின் காதை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்தையன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...