காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்க முயற்சி: மூவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுக்கா பொன்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.பி.கிருஷ்ணன். இவருடைய மகன் சேதுராமன் (42) கட்டட பொறியாளராக மதுரையில்

News image
Updated On :10 டிசம்பர் 2014, 3:25 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விற்க முயன்ற மூன்று பேரை சிதம்பரம் நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுக்கா பொன்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.பி.கிருஷ்ணன். இவருடைய மகன் சேதுராமன் (42) கட்டட பொறியாளராக மதுரையில் பணியாற்றுகிறார். இந்நிலையில் எஸ்.பி.கிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. ஒன்றே முக்கால் கோடி மதிப்பிலான கட்டடம் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ளது. இந்த சொத்தை சேதுராமனின் உறவினர்களான கோவையைச் சேர்ந்த தில்லை மணி (64), அவருடைய சகோதரிகள் கல்யாணிதேவி, மீனாள் ஆகியோர் போலியான வாரிசு சான்றிதழ் தயாரிக்கு கட்டடத்தை அபகரித்து வேறொருவருக்கும் விற்பனை செய்ய முயன்றுள்ளனர். போலி ஆவணம் தயாரிக்க பழையநல்லூரைச் சேர்ந்த இளவரசன் (45), சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கசாமி (55) ஆகியோர் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து சேதுராமன் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தில்லைமணி, இளவரசன், தங்கச்சாமி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் வழக்கில் போலி வாரிசு சான்று பெற்ற கல்யாணிதேவி, மீனாள் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.