ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 யானைகள் புகுந்து அட்டகாயம் செய்ததில் பயிர்கள் நாசமாயின.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமம் வனத்துறை எல்லையோரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வந்து செல்கின்றன. செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சுமார் 9 யானைகள் அக்கிராமத்திற்கு வந்துள்ளது. அங்கு தேவன் என்பவருடைய விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளன. நிலத்தில் நெல், வாழை ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. சுமார் முக்கால் ஏக்கர் நெல்பயிர் முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளது. மேலும் சில வாழை மரங்களையும், ஒரு தென்னை மரத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த வனத்துறை பணியாளர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று யானைகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அவரை அங்கிருந்து காட்டுக்குள் சென்றன. திரும்ப யானைகள் வந்தால் அவற்றை விரட்ட பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர்.
பேர்ணாம்பட்டு சாரங்கல் வனப்பகுதியிலிருந்து அந்த யானைகள் வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

