92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மறியல் போராட்டம்

பரங்கிப்பேட்டை மாதா கோயில் தெருவைச் சேர்ந்த வசிக்கும் ஜோதிக்குமார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கிளை செயலாளரான இவரது மனைவி பெயர் காவேரி (40) இவர் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை

News image
Updated On :16 டிசம்பர் 2014, 12:32 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் இறந்தனர்.

பரங்கிப்பேட்டை மாதா கோயில் தெருவைச் சேர்ந்த வசிக்கும் ஜோதிக்குமார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கிளை செயலாளரான இவரது மனைவி பெயர் காவேரி (40) இவர் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வீட்டின் அருகே உள்ள குப்பைகளை கூட்டும் போது இவர் வீட்டுக்கும் பின்பு உள்ள கோவிந்தராஜூ என்பவர் வீட்டுக்கு செல்லும் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த காவேரி தூக்கி எரியப்பட்டு கீழே

விழுந்து கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த எதிர் வீட்டில் வசிக்கும் ஜெகந்நாதன்(45) காவேரி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து காப்பாற்ற தூக்கியுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி எரியப்பட்டு அவரும் சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது காவேரி மிகவும் அபாயநிலையில் இருந்துள்ளார். மருத்துவமனையில் 30 நிமிடத்திற்கு மேலாக பணியில் மருத்துவர் இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காவேரி இறந்துள்ளார்.

கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல்:

தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் வேல்முருகன், விவசாய சங்க அமைப்பாளர் கருனைச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர் இல்லாததை கண்டித்தும், பழுதான மின் கம்பியை மாற்றாத மின்துறையை கண்டித்தும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இருதயமேரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மின்துறை அதிகாரிகள் மீதும், பணியில் இல்லாத மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வது என்றும், இறந்துபோனவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை பெற்றுத்தருவது என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து கம்யூ கட்சியினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று உடல்களை பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தெரிவிக்கையில் மின் கம்பியை மாற்ற 15 நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மின்துறை அதிகாரிகள் மீதும், மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என எஸ்.ஜி.ரகமேஷ்பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.