தூத்துக்குடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறினார்.
இதையடுத்து, தூத்துக்குடி பகுதி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த அழைப்பு வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்து.
விசாரணையில் இந்த அழைப்பு தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே ஒரு பொதுத் தொலைபேசி அழைப்பில் இருந்து வந்தது என்று தெரிய வந்துள்ளது. மேலும், தொலைபேசியில் பேசியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 7,600 குறைவு! மாலை நிலவரம்!
அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து! யார் யாருக்கு எவ்வளவு?
கேப்டனின் குடும்பம் ஒரு கார் வாங்கக்கூட தகுதி இல்லையா? பிரேமலதா அவேசம்!

தேர்தல் முடிந்ததும் வெளியாகும் ஜன நாயகன்?
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

