தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சிவக்குமார் கூறியது: பள்ளிக் கல்வித் துறை வெளியிடுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், வரும் மார்ச் 19-ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வும், 4 நாட்கள் இடைவெளிக்குப் பின் மார்ச் 24-ம் தேதி தமிழ் 2-ம் தாள் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 26-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு அடுத்து, போதிய கால இடைவெளியின்றி தொடர்ந்து ஆங்கிலம் முதல் தாள் மற்றும் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு சரியும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மொழிப் பாட தேர்வுகளுக்கு இடையே போதி கால அவகாசம் அளித்து, தேர்வு கால அட்டவணையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்க கழகம் சார்பில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

