92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க வலியுறுத்தி டிச.31-ல் உண்ணாவிரதம்: விவசாயிகள் முடிவு

காட்டுமன்னார்கோயில் பிரியதர்ஷினி மண்டபத்தில் கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 3:08 pm

ஜி.சுந்தரராஜன்

நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கக் கோரி காட்டுமன்னார்கோயிலில் வருகிற டிச.31-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

காட்டுமன்னார்கோயில் பிரியதர்ஷினி மண்டபத்தில் கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.எஸ்.வைத்தியநாதசாமி, எம்.பாரதி, எம்.அன்பழகன், எல்.லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பழனிசாமி கருத்துரையாற்றினார். ஜி.ஆசைதம்பி, முருகேசன், பாலமணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயராமன், ஆர்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர் கூலி உயர்வு, உரம், பூச்சி மருந்து, உழவு கூலி உயர்வு, அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு என ஆண்டுக்கு ஆண்டு விவசாய செலவு அதிகரித்துக் கொண்டு செல்வதால் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் சாதாரண நெல்லுக்கு ரூ.1410-ம், சன்ன ரகத்திற்கு 1470-ம் வழங்க அரசு முன்வந்துள்ளது. இதில் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.50 மட்டுமே. எனவே நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கிடவும், மாநில அரசின் பங்காக ஊக்கத் தொகையாக ரூ.500-ம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற டிச.31-ம் தேதி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது; தனியார் வியாபாரிகள் 61 கிலோவிற்கு பதிலாக 65 கிலோவிற்கு மேல் கொள்முதல் செய்கின்றனர். எனவே தமிழகஅரசு தனியார் நெல் வியாபாரிகளை கண்காணிக்கவும், அதில் 61 கிலோவிற்கு மேல் மூட்டை எடுக்கும் வியாபாரிகளின் தராசுகளை பறிமுதல் செய்ய வேண்டும். கூடுதல் எடையில் நெல்மூட்டைகள் இருந்தால் அரிசி ஆலைக்கு சீல் வைக்க வேண்டும் என அரசை கோருவது; அறுவை இயந்திரங்களை தட்டுப்பாட்டை போக்க வேண்டும்;

வீராணம் ஏரி தூர்வார ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே ஜனவரிக்கு பிறகு கீழணையிலிருந்து, வீராணம்ஏரிக்கு நீர் அனுப்புவதை நிறுத்தி, விவசாயத்திற்கு போக பிப்ரவரி 2015-ல் நீரை வெளியேற்றி கோடையில் ஏரியை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; காட்டுமன்னார்கோயில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச்சான்று வாங்க செல்லும் விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்படுவதால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.