மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வல்லூர் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல்

Updated On :22 டிசம்பர் 2014, 10:36 am

வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள்  ஆர்பாட்டம் செய்தனர். பொன்னேரி வட்டம் வல்லூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இதில் தகுதியுடைய நபர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் கழிப்படம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொழிலாளர்களுக்கு  ஏற்படுத்தி தரக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் தலைவர் விஜயன் தலைமையில் அனல் மின் நிலையம் முன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.