நெல்லையில் 824 மாணவர்களுக்கு பொறியியல் பட்டமளிப்பு
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட 824 மாணவர்-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட 824 மாணவர்-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டலம், மண்டல உறுப்புக் கல்லூரிகளான தூத்துக்குடி வ.உசி. பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மா.ராஜாராம் தலைமை வகித்தார். இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் ம.நடராஜன், 824 மாணவர்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 24 மாணவர்-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் சி.கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மு.வெங்கடேசன், திருநெல்வேலி மண்டல அறிவுரையாளர் ரைமண்ட் உத்ரியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மண்டல மையப் புல முதல்வர் டி.வி.எஸ்.பிள்ளை அறிக்கை வாசித்தார். நாகர்கோவில் புல முதல்வர் வி.கவிதா, தூத்துக்குடி புல முதல்வர் ந.செண்பக விநாயகமூர்த்தி, பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...