மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் மாவட்டத்தில் 23 போலீஸ் எஸ்ஐகள் இடமாற்றம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 23

Updated On :2 பிப்ரவரி 2014, 12:23 pm

கடலூர் மாவட்டத்தில் 23 போலீஸ் எஸ்ஐகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 23 எஸ்ஐகளை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா சனிக்கிழமை உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள எஸ்ஐகள் விவரம்: முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எஸ்ஐ அருண்குமார் விருத்தாசலத்துக்கும், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ பவானி நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், புதுச்சத்திரம் சபீதா சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கும், திட்டக்குடி பிரேமா சேத்தியாத்தோப்புக்கும், கடலூர் பொருளாதாரக்குற்றப்பிரிவு எஸ்ஐ ஜோதி நெல்லிக்குப்பத்துக்கும், காடாம்புலியூர் ராஜமாணிக்கம் புவனகிரிக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பத்மா முத்தாண்டிக்குப்பத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ சங்கீதா தேவனாம்பட்டினத்துக்கும், சமூகநீதி மற்றும் மனிதஉரிமைப்பிரிவு எஸ்ஐ வி.துர்கா கடலூர் புதுநகருக்கும், பெண்ணாடம் ஜெயராமன் ஒரத்தூருக்கும், ஸ்ரீமுஷ்ணம் ஜெயபாலன் வடலூருக்கும், புதுச்சத்திரம் கண்ணுசாமி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்துக்கும், ஊமங்கலம் மனோகரன் ஆவினங்குடிக்கும், ஒரத்தூர் பன்னீர்செல்வம் புதுச்சத்திரத்துக்கும், கிள்ளை கணேசன் சிதம்பரம் டவுனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்ஐ மணி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டுஅறை எஸ்ஐ தேவேந்திரன் கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமைப்பிரிவுக்கும், சிவஞானம் கிள்ளைக்கும், கோமதி வேப்பூருக்கும், விஷ்ணுபிரியா குள்ளஞ்சாவடிக்கும், பொன்மகரம் ஒரத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ லூசி கடலூர் கட்டுப்பாட்டு அறைக்கும், கடலூர் கட்டுப்பாட்டு அறை பரமேசுவரன் நெல்லிக்குப்பத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணி: 

அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யும் போது, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் நியமிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த விதிக்கு புறம்பாக கடலூர் மாவட்டத்தில் ஒரு சில எஸ்ஐகள் ஏற்கனவே பணியாற்றிய இடத்துக்கே பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.