/

நடராஜர் கோயில் தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆய்வு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றுள்ளது. இதனால் தற்போது நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 3:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றுள்ளது. இதனால் தற்போது நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே வருகிற ஆனித்திருமஞ்சன தரிசனத்திற்குள் தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் திங்கள்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர்.

பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால், நிதிக்குழுத் தலைவர் பிரதாப்குமார், நிர்வாகிகள் ராமநாதன், ஹேமநாத், ராமலிங்கம் ஆகியோர் தேர்களையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த தேர்கள் புதுப்பிக்க வாங்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் கோயில் பொதுதீட்சிதர்களிடம் ஆலோசனை நடத்திய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகளை வரவழைத்து தேர்களை விரைந்து சீரமைப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.