வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இடைநிலை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், ஒரங்கூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் எஸ்.இசக்கிராஜா. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கும் ராமநாதபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சந்தியாவுக்கும்(22) திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சந்தியாவின் பெற்றோர் வரதட்சணையாக 35 பவுன் நகை, ரூ.3.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் போது சந்தியாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு செல்வாராம்.கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக ராமநாதபுரத்துக்கு சென்றிருந்த சந்தியா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இசக்கிராஜா மீது இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 12-ஆம் தேதி அவரை கைது செய்தார். பின்னர் 22ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆசிரியர் இசக்கிராஜாவை பணி இடைநீக்கம் செய்து கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி குணசேகரன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

