ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்தக் கோரிக்கை

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டுமெனக் கோரி ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் சனிக்கிழமை நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விளக்க

Updated On :9 பிப்ரவரி 2014, 11:09 am

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டுமெனக் கோரி ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் சனிக்கிழமை நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர செயலர் எஸ்.ஏ. ஹமீத் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலர் முனைவர் ஜெ. ஹாஜாகனி, தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர் மற்றும் ஆம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அ. அஸ்லம் பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் வி.ஆர். நசீர் அஹமத், மாவட்ட துணைத் தலைவர் மன்னான், பொருளர் பிஸ்பாவூர் ரஹ்மான், தமுமுக நகர செயலர் எஸ். தப்ரேஸ் அஹமத், கழக பேச்சாளர் சி.கே. சனாவுல்லா,  நகர துணைத் தலைவர் சாதிக் அஹமத், துணைச் செயலர் அப்ரோஸ் அஹமத், மக்கள் தொடர்பு அலுவலர் டி.கே. கிஜர் உசேன், நபீர் அஹமத், அல்லா பக்ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பீகார், அஸ்ஸாம், ஒடிசா மாநிலங்களை போல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்தி, ஆம்பூர் பகுதியில் மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெட்டி தோப்பு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.  அந்த மேம்பால கட்டுமானப் பணியை விரைவாக தொடங்கி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆம்பூர் ஆனைமடுகு ஆணையை தூர் வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.