பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனியில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் நாணயம் சேகரிப்பு

இக்காசு கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பித்தளை நாணயம் ஆகும். இதை பாண்டியப்பேரரசின் மன்னர் சுந்தரபாண்டியன் அவரது ஆட்சிக்காலத்தில் வெளியிட்டுள்ளார்.  நாணயத்தின் ஒரு பக்கம் சுந்தரன் என்ற

News image
Updated On :10 பிப்ரவரி 2014, 11:16 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தைய பித்தளை நாணயம் கண்டறியப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சுகுமார்போஸ்.  இவர் நாணயங்கள் சேகரிக்கும் பழக்கமுடையவர்.  இவர் சேமித்து வைத்துள்ள காசுகளில் பழனி பகுதியில் கிடைத்த நாணயங்களில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தைய காசும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, சுகுமார் போஸ் கூறியதாவது:-

இக்காசு கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பித்தளை நாணயம் ஆகும். இதை பாண்டியப்பேரரசின் மன்னர் சுந்தரபாண்டியன் அவரது ஆட்சிக்காலத்தில் வெளியிட்டுள்ளார்.  நாணயத்தின் ஒரு பக்கம் சுந்தரன் என்ற பெயர் இரண்டு வரிகளில் மடக்கி எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கம் பாண்டியப்பேரரசின் அரசு முத்திரையான இணைஇயல் செண்டு பொறிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் இரண்டு மீன்களும், இடையில் வலப்புறம் வளைந்த செண்டும் இதில் காணப்படுகிறது.  நாணயத்தின் ஓரங்களும், பக்கங்களும் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.

15 மில்லி மீட்டர் குறுக்களவுள்ள இந்த நாணயத்தின் எடை 800 மில்லி கிராம் ஆகும். பழனி பகுதியை கொங்கு சோழர்களும், பாண்டியர்களும் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளனர். வையாவி நாட்டுப் பழனி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் பழனியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மிகுந்த அளவில் காணப்படுகிறது.  தற்போது அவரது ஆட்சிக்கால நாணயமும் கிடைத்துள்ளது பல்வேறு வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.