காவலர் கொலை: விடுதலைச் சிறுத்தைகளின் 4-ம் நாள் போராட்டம் முடிவிற்கு வந்தது
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் கடந்த பிப்.10-ம் தேதி கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச்


கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் கடந்த பிப்.10-ம் தேதி கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 3- தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 4-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் உதவிஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அறந்தாங்கி சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வக்குமார் (29). இவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் தெய்வக்குமார் பிப்.10-ம் தேதி இரவு சோழத்தரம் அருகே பெரியகுப்பத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் காலை வீடு திரும்பவில்லை. செவ்வாய்க்கிழமை காலை தெய்வக்குமார் மர்மநபர்களால் தாக்கப்பட்டு சோழத்தரம் கோவிந்தநல்லூர் கைகாட்டி பூங்கா அருகே காது அறுபட்டு நிலையில், தலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து சோழத்தரம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கொலை வழக்காக பதிவு செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கடந்த மூன்று தினங்களாக உடலை பெற மறுத்து சாலைமறியல், மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தனர். இப்போராட்டத்தில் புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று கொலையுண்ட ஆயுத்தப்படை காவலரின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்து, கொலை வழக்காக மாற்றி, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெறாமல் விடுதலைச் சிறுத்தைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துவிட்டு சென்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் வியாழக்கிழமை மருத்துவமனை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கூடினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காந்திசிலை அருகே ஒலிபெருக்கி இல்லாமல் சாலையில் அமர்ந்து 10 நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து காந்திசிலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பா.தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை 4-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட மருத்துவமனை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். பின்னர் மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டிஎஸ்பி ஆர்.ராஜாராம், வட்டாட்சியர் எம்.விஜயா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன், மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், துணைச் செயலாளர் பி.குறிஞ்சிவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைசெல்வம், தீண்டாவை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல் தெய்வக்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலன் அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளியை நியமித்து, வழக்கை துரிதப்படுத்துவது எனவும், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விரிவாக வரும் திங்கள்கிழமை சிறப்பு கூட்டத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உடலை பெற்று வெள்ளிக்கிழமை அன்றே அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...