சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதியில் பூத்கமிட்டி அமைக்க பாஜக முடிவு!
கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்


சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் 90 சதவீதம் பூத்கமிட்டி அமைப்பது என பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்டத் தலைவர் ஜெ.சுகுமாறன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில எஸ்சி அணி பொதுச்செயலாளருமான செல்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் காவி.கண்ணன்பிள்ளை, மாவட்ட பொதுச் செயலாளர் துறைமுகம் செல்வம், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.பி.செல்வம், நகரத் தலைவர் ஆர்.திருமாறன், மாவட்ட வர்த்தக அணி பொதுச்செயலாளர் கே.ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணித் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் உமாபதிசிவம், தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணராவ், சத்யாரமேஷ், நடனம்பிள்ளை, சி.பழனிராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் 90 சதவீத பூத்கமிட்டி அமைக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிட கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படும் என மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்ததின் படி, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 90 சதவீத பூத்கமிட்டி அமைக்க முயற்சிகள் மேற்கொள்வது; பாஜக வேட்பாளரோ அல்லது கூட்டணியில் நிறுத்தப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...