பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருப்பூர் மேயர் தலைமையில் அதிமுக மகளிரணியினர் பழனிக்கு பால்குடம் ஏந்தி பாதயாத்திரை

தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும், திருப்பூர்

News image
Updated On :15 பிப்ரவரி 2014, 5:44 am

என்.​ அங்​கு​பாபு

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மேயர் தலைமையில் அதிமுக மகளிர் அணியினர் சனிக்கிழமை பழனிக்கு பால்குடம் ஏந்தி பாதயாத்திரை வந்தனர்.

தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும், திருப்பூர் மேயருமான மேயர் விசாலாட்சி தலைமையில் திருப்பூர் மகளிரணி நிர்வாகிகள் 66 பேர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை துவங்கினர்.  பாதயாத்திரை பயணத்தின் போது முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க மேளதாளம் முழங்க பாதயாத்திரை வெள்ளிக்கிழமை பழனி வந்தடைந்தது.  பழனி வந்த அதிமுக மகளிரணி பாதயாத்திரை குழுவினரை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு மற்றும் கட்சியினர் சால்வை வழங்கி வரவேற்றனர். 

பாதயாத்திரை குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு தங்கி சனிக்கிழமை முதல்வரின் மகம் நட்சத்திரம் வந்ததால் காலை 7 மணிக்கு மலைக்கோயிலுக்கு பால்குடங்களுடன் சென்று மூலவர் தண்டாயுதபாணிக்கு தமிழக முதல்வர் பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள்,அபிஷேகங்கள் நடத்தினர். மேயர் விசாலாட்சிக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், பெரியநாயகியம்மன் அறக்கட்டளை தலைவர் சுந்தரம், தாராபுரம் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.