பழனியில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள்
பழனி அடிவாரம் அங்காளஈஸ்வரி திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் நெய்க்காரபட்டி அரிமாசங்கம் ஆகியன இணைந்து தமிழக முதல்வரின்


பழனியில் சனிக்கிழமை மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 8வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேர்வுகள் நடைபெற்றது.
பழனி அடிவாரம் அங்காளஈஸ்வரி திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் நெய்க்காரபட்டி அரிமாசங்கம் ஆகியன இணைந்து தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 8வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேர்வுகளை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். நெய்க்காரபட்டி அரிமா சங்க அறக்கட்டளை செயலர் மயில்சாமி, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் மாநிலத் தலைவர் மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா போட்டிகளை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நெய்க்காரபட்டி அரிமா சங்க தலைவர் வடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் கோவை, சேலம், ஈரோடு, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பிரமிடு வகையிலான யோகா, நடனம், இசையுடன் கூடிய யோகா, மூக்கில் கயிறை விட்டு வாய்வழியே எடுக்கும் சூத்திரரெட்டி வகை யோகா பலரையும் ஈர்த்தது. பல்வேறு வயது பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றது
. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர். சேம்பியன்ஷிப் வின்னர் கோப்பையையும், டைட்டில் அவார்டு கோப்பையையும் ஒட்டன்சத்திரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வென்றது. சேம்பியன்ஷிப் ரன்னர் கோப்பையை தேனி சங்கரநாராயணா பள்ளி வென்றது.
ரேங்கிங் கோப்பையை வாகரை ரேணுகாதேவி பள்ளியும், காமன் கோப்பையை சேலம் ஜெயினா மெட்ரிக் பள்ளியும் வென்றது. அத்லெட்டிக் கோப்பையை பழனி அக்க்ஷயா மெட்ரிக் பள்ளியும், தேவா ஸ்போர்ட்ஸ் கோப்பையை பழனி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியும் பெற்றது. மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்க செயலர் கரிகாலன் நன்றியுரை வழங்கினார். விழாவில் நகர அர்பன் வங்கி தலைவர் மாரியப்பன், பெரியநாயகியம்மன் அறக்கட்டளை தலைவர் சுந்தரம், நேர்முக உதவியாளர் பெரியசாமி, நெய்க்காரபட்டி அரிமா சங்கம் தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...