ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கன்டெய்னர் லாரியில் மின்சார கம்பி சிக்கி அறுந்தது :  பலர் உயிர் தப்பினர்

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கன்டெய்னர் லாரியில் மின்சார கம்பி சிக்கி அறுந்து விழுந்தது.  மின்கம்பமும் சாய்ந்தது.  இதில் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Updated On :16 பிப்ரவரி 2014, 10:59 am

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கன்டெய்னர் லாரியில் மின்சார கம்பி சிக்கி அறுந்து விழுந்தது.  மின்கம்பமும் சாய்ந்தது.  இதில் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமம் அமைந்துள்ளது.  இவ்வழியாக தான் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் பல தோல் தொழிற்சாலைகளும் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது.  அதனால் தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரி போன்ற கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும்.  துத்திப்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே மின்சார கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது.

இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மின்வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஒரு லாரி அவ்வழியாக சென்றபோது மின்சார கம்பி அதில் சிக்கியுள்ளது. அப்பகுதி மக்கள் அதனை தூக்கி விட்டுள்ளனர்.  இந்நிலையில் ஞாயிர்றுக்கிழமையும் அதே போல கன்டெய்னர் லாரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி சிக்கியுள்ளது.  அதை கவனிக்காத டிரைவர் லாரியை தொடர்ந்து இயக்கியுள்ளார்.   அதனால் மின்சார கம்பி அறுந்தது.  அங்கிருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்தது.  மின்சாரம் தடைப்பட்டதால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த பலர் உயிர் தப்பினர்.  மின்சாரம் தடைபடாமல் இருந்திருந்தால் உயர்சேதம் ஏற்பட்டிருக்கும்.

அதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதில் லாரியின் கண்ணாடி உடைந்தது. மேலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உமர்ஆபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.   மின்சார வாரிய பணியாளர்கள் உடனடியாக அங்கு சென்று மின்சார வயரை இணைக்கும் பணியை மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.