ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக்கக் கோரி கடையடைப்பு, பேரணி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் கோரி, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கடையடைப்பு, பேரணி ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால்

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 8:11 am

சங்கர்

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் கோரி, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கடையடைப்பு, பேரணி ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட கால கோரிக்கை. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிப் பட்டியலில், மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி முதன்மைப் பெறுவது வழக்கம்.

ஆனால், இத்தொகுதியில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், தனி மாவட்டம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது மயிலாடுதுறை பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மயிலாடுதுறை வணிகர் சங்கங்கள், சேவை சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் அழைப்பின் பேரில் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

உணவகங்கள், பெட்டிக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடியிருந்தன. இதனால், மயிலாடுதுறையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், சேவை சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள், வழக்குரைஞர்கள் உள்பட சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

காவேரி நகரிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, கூறைநாடு, காமராஜர் வீதி, கண்ணாரத்தெரு, சின்னக்கடைத் தெரு, மகாதானத் தெரு, மணிக்கூண்டு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை வழியே வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுதப்பட்ட பதாகைகளுடன், கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனர்.பேரணியின் நிறைவில், மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத்தில் நிறைவேற்ற தீர்மானப்படி, மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற வழக்குப் பணிகள் முழுமையாக தடைபட்டிருநதன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.