தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சிறப்பாகக் கொண்டாட முன்னாள் அமைச்சர் தா.இன்பத்தமிழன் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் பிறந்தநாளையொட்டி, முன்னதாக, 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் காலை 10 மணிக்கு முதல்வர் எல்லா வளங்களும் பெற்று, இந்திய மக்களுக்கும் தனது சேவையைத் தொடர வேண்டி தங்கத் தேர் இழுக்கப்படுகிறது.
24-ம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலையில் ஸ்ரீஆண்டாள் கோயிலில் முதல்வர் ஜெயலலிதாவின் நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் ராப்பத்து மண்டபத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மேலும் உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள், ரொட்டி வழங்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகாபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் முதல்வர் நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் குட்டதட்டி வள்ளலார் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மாணவர்கள், முதியவர்களுக்கு மூன்று வேளையும் சிறப்பான உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், கட்சியின் நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


