பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சொத்து தகராறில் முன்விரோதம் திருக்குறுங்குடி பேரூராட்சி உறுப்பினர் வெட்டிக் கொலை

களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் சொத்து தகராறில் பேரூராட்சி உறுப்பினரை வியாழக்கிழமை மாலை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய உறவினரை

News image
Updated On :27 பிப்ரவரி 2014, 2:34 pm

ரக்குமாயி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் சொத்து தகராறில் பேரூராட்சி உறுப்பினரை வியாழக்கிழமை மாலை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தலைவன்பட்டயத்தைச் சேர்ந்தவர் இ. மகராஜன் (58). அதிமுக-வைச் சேர்ந்த இவர் திருக்குறுங்குடி பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மகராஜனுக்கும் அவரது அண்ணன்

திருமலைநம்பி-க்கும் இடையே சொத்து தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு மகராஜன் மோட்டார் சைக்கிளில் நம்பித்தலைவன்பட்டயத்தில் இருந்து ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்தாராம். பைக் தளவாய்புரம் அருகே சென்ற போது, திருமலைநம்பி மகன் மாயாண்டி, மகராஜனை வழிமறித்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டாராம்.

ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகராஜன் இறந்தார். இச்சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீஸôர் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள மாயாண்டியை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் சித்தப்பாவை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.