ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

நாகூர் அருகே பால்பண்னைசேரியை சேர்ந்த ஆர்.சுரேஷ் (39) நேற்று போலீஸ்விசாரணைக்கு அழைத்து செல்லப்டார். அதன் பின் அவர் வீடு திரும்பாமல் உயிரிழந்துள்ளார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :1 ஜனவரி 2014, 6:43 am

சங்கர்

நாகூர் அருகே பால்பண்னைசேரியை சேர்ந்த ஆர்.சுரேஷ் (39) நேற்று போலீஸ்விசாரணைக்கு அழைத்து செல்லப்டார். அதன் பின் அவர் வீடு திரும்பாமல் உயிரிழந்துள்ளார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட்னர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-  நாகூர் காவல் ஆய்வாளர் என்.எஸ். ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று இரவு நாக்கூர் சோதனை சாவடி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை குடி போதையில் அமர்ந்திருந்த நாகூர் பால்பண்ண்னை சேரியை சேர்ந்த சுரேஷ்  திட்டியதோடு சட்டையை பிடித்து தகாராறு செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நாகூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நேற்று நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லும் முன்பாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீஸார் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதனால் போலீஸாரின் தாக்குதலில் தான் அவர் உயிரிழந்துள்ளார் என போலீஸாரை கண்டித்து அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் இன்று நாகை பிரதான சாலையில் பால்பண்ணை சேரியில் திடீர் சாலை மாறியல் செய்தனர்.

அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் பேசுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.