வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6 பேரிடம் ரூ. 4 லட்சம் பண மோசடி செய்ததாக பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முருகவேல், நெய்வேலியை சேர்ந்த ராஜசெல்வம், எ.புதூரை சேர்ந்த சிவசண்முகபூபதி உள்ளிட்ட 6 பேர் மாவட்ட எஸ்பி ஆ.ராதிகாவிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் ரஜியா பேகம். எங்களுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்போது வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் வேலை செய்வதாகவும், சிங்கப்பூர், மலோசியா, துபாய் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்பிய 6 பேரும், அவர் கேட்டபடி, ரூ.4 லட்சத்து 1,000 ரூபாயை, ரஜியா பேகத்திடம் கொடுத்தோம். ஒரு ஆண்டுக்கு முன்னர் பணம் கொடுத்தும், அவர் எங்களில் ஒருவரை கூட வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. பணத்தை கேட்டு பலமுறை அவர் வீட்டுக்கு சென்றுள்ளோம். ஆனால் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரஜியா பேகம் தலைமறை வாகிவிட்டார். அவரிடமிருந்து எங்களுக்கு பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்.
புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி, விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

