தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தெற்குவாயிலை திறக்கக் கோரி போராட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள்

News image
Updated On :3 ஜனவரி 2014, 12:49 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகக்குழுக் கூட்டம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அ.அதியமான், துணைச் செயலாளர்கள் குறிஞ்சிவளவன், இளவழகன், கங்கைஅமரன், தமிழ்வளவன், வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரா.நெடுமாறன் நன்றி கூறினார்.
 

தீர்மானங்கள்: கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கடைமடை பகுதியான மானம்பார்த்தான் வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால் ஆகியவற்றில் வேளாண் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும், மானியம் அல்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு செய்ததை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.