பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாற்று சக்தியாக இடதுசாரி சிந்தனையாளர்களை வழிமொழிய வேண்டும்: கு.பாலசுப்பிரமணியன்

அடித்தட்டு மக்களுக்கான அரசு அமைக்க விரும்பும் மாற்று சக்தியாக உள்ள இடதுசாரி சிந்தனையாளர்களை மக்கள் வழிமொழிய வேண்டும் என முற்போக்கு சிந்தனையாளர் இயக்க மாநில

News image
Updated On :5 ஜனவரி 2014, 2:19 pm

ஜி.சுந்தரராஜன்

அடித்தட்டு மக்களுக்கான அரசு அமைக்க விரும்பும் மாற்று சக்தியாக உள்ள இடதுசாரி சிந்தனையாளர்களை மக்கள் வழிமொழிய வேண்டும் என முற்போக்கு சிந்தனையாளர் இயக்க மாநில அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்க அரங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ரா.ராகவேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நா.சுந்தரவிநாயகம் முன்னிலை வகித்தார். முற்போக்கு சிந்தனையாளர் இயக்க மாநில அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் பங்கேற்று 'இன்றைய அரசியல் பொருளாதார சூழலில் மக்களுக்கான மாற்றுப்பாதை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

புதிய பொருளாதார கொள்ளையினால் விலைவாசி கடுமையாக ஏறி வருகிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை இஷ்டத்திற்கு உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து தவறான கொள்கையினால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரிவிதிப்பை பொதுமக்களுக்காகவும், வரி ஏய்ப்பை பன்னாற்று நிறுவனங்களுக்கும் மத்தியஅரசு அனுமதித்து வருகிறது. தனியார் பங்களிப்பை ஊக்கவிப்பதால் லாபம் ஈட்டிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று நஷ்டமடைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விலை உயர்த்துவதற்கான ஒரு அரசாக மத்தியஅரசு செயல்படுகிறது என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய கம்யூ கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின் மண்சடேலாவின் நினைவு குறித்து உரையாற்றினார். பொருளாளர் ஆ.நரசிம்மன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.