பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கடை உரிமையாளரிடம் ரூ.மூன்றரை லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்ற ஊழியர் கைது

நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த இரும்புக்கடை உரிமையாளர் முருகன் (45). இவரது கடையில் பண்ருட்டி நடுக்குப்பத்தைச் சேர்ந்த மணிபாரதி (32) என்பவர் வேலை பாரத்து

News image
Updated On :6 ஜனவரி 2014, 1:28 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் இரும்பு கடை உரிமையாளரிடம் ரூ.மூன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவான ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த இரும்புக்கடை உரிமையாளர் முருகன் (45). இவரது கடையில் பண்ருட்டி நடுக்குப்பத்தைச் சேர்ந்த மணிபாரதி (32) என்பவர் வேலை பாரத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு கடை உரிமையாளர் முருகன், மணிபாரதியை அழைத்துக் கொண்டு சிதம்பரம் மேலவீதியில் உள்ள சீட்டு நிறுவனத்திற்கு ஏலத்தில் பங்கேற்க வந்தார்.

அப்போது முருகன் தன்னிடம் இருந்த ரூ.மூன்றரை லட்சம் பணத்தை ஊழியர் மணிபாரதியிடம் கொடுத்துவிட்டு ஏலத்தில் பங்கேற்க உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது பணத்துடன் மணிபாரதி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் விசாரணை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த மணிபாரதியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.