ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ரிசர்வ் வங்கியில் உள்ள நகைகளை நீதிபதி குழு ஆய்வு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நகைகளை பெங்களூரு சிறப்பு நீதிபதி உள்பட 11-பேர் அடங்கிய குழு


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நகைகளை பெங்களூரு சிறப்பு நீதிபதி உள்பட 11-பேர் அடங்கிய குழு திங்கள்கிழமை சென்னையில் ஆய்வு செய்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு, சிறப்புநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பறிமுதல் செய்துள்ள தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அசையும் சொத்துகளை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டுவரக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா, வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, நகை மதிப்பீட்டாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என 11 பேர் அடங்கிய குழு சென்னை ரிசர்வ் வங்கியில் அனைத்து நகைகளையும் திங்களிகிழமை ஆய்வு செய்தனர். மேலும், சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு தாடெர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் நீதிபதி அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே, ரிசர்வ் வங்கியில் உள்ள அனைத்து நகைகளும் பெங்களூரு கொண்டு செல்லப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...