தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிவாசல் புணரமைக்க நிதி வழங்க ஜெயலலிதா உத்தரவு: வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் தகவல்

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிவாசல் புணரமைக்க நிதி வழங்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆனை பிறப்பித்துள்ளார் என அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற

News image
Updated On :7 ஜனவரி 2014, 11:40 am

ஜி.சுந்தரராஜன்

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிவாசல் புணரமைக்க நிதி வழங்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆனை பிறப்பித்துள்ளார் என அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன்உசேன் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு கூட்டத்திற்கு முகமதுஜியாவுதீன் தலைமை வகித்தார். தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட ஜமாத் தலைவர் நுாருல் அமின் அஜ்ரத், மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஜமாலுதீன், இஸ்மாயில்நாஜி, லியாகத்அலி, முகமதுஅலி, மீர்அமீது, உசேன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

பின்னர் ஏ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு 2113 பேர்தான் ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக 600 பேருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஏற்கனவே ஹஜ் பயணத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.30 லட்சமாக முதல்வர் உயர்த்தியுள்ளார். ரூ.3 கோடி நிதி வழங்கி வக்போர்டு மேம்பாட்டு நிதி திட்டத்தை தொடங்கியுள்ளார். மாவட்டம் தோறும் உருது அகாதெமியை தொடங்கியுள்ளார். ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வுபெற்று வறுமையில் வாடிய வக்பு வாரிய பணியாளர்கள் 77 பேருக்கு நிலுவைத்தொகை தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் 14,500 கோடிக்கு வக்பு வாரிய சொத்துக்கள் உள்ளன. ஆனால் வக்பு வாகியத்தில் ரூ.8300 கோடிக்கான சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள 6 ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். நான் வாரியத் தலைவராக பொறுப்பேற்றவுடன் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பிலான 14 பங்களாக்கள் கொண்ட அருணா கார்டன் பகுதியை இடித்து மீட்டேன். ஆக்கிரமிப்புகளை தையரியமாக அகற்றுங்கள் என முதல்வர் என்னிடம் தெரிவித்துள்ளார். கல்வி நிதி வழங்க தமிழக முதல்வரிடம் கோரியுள்ளோம். தற்போது சட்டப்பேரவை நிதியிலிருந்து பள்ளிவாசல் புணரமைக்க நிதி ஒதுக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.