பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆசிரியர் திட்டியதால் தூக்கு போட்டு பள்ளி மாணவர் தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளி ஆசிரியர் திட்டிதலால் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் வியாழக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை

News image
Updated On :9 ஜனவரி 2014, 2:02 pm

ஜி.சுந்தரராஜன்

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளி ஆசிரியர் திட்டிதலால் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் வியாழக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருபவர் குமார். இவரது மகன் பிரேம்குமார் (14) அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 கூட்டத்திற்கு மாணவர் பிரேம்குமார் மற்றும் அவரது தாயார் கலைச்செல்வியை அழைத்துள்ளனர். கூட்டத்தில் மாணவர் பிரேம்குமார் சரியாக படிக்கவில்லை. இவ்வாறு படித்தால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பி விடுவோம் என ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவர் பிரேம்குமார் வீடு திரும்பியதும் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை பிரேம்குமார் பெற்றோர் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்த போது மாணவர் பிரேம்குமார் வீட்டு கதவை உள்புறம் தாழிட்டு தூக்குப் போட்டுக் கொண்டதாக தெரிகிறது. வீடு திரும்பிய பெற்றோர் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பிரேம்குமார் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.