சிதம்பரம் பகுதியில் கூடுதல் எடைக்கு தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு இழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் தனியார் வியாபாரிகள் கூடுதல் எடைக்கு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு


கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் தனியார் வியாபாரிகள் கூடுதல் எடைக்கு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் தற்போது சம்பா நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசு நிர்ணய விலையில் இந்த ஆண்டு 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.840 மட்டுமே கிடைக்கும். எனவே இதனை தனியார் நெல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளிடம் கூடுதல் எடை வைத்து ரூ.920-க்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது: சாக்கு உள்பட 61 கிலோ மூட்டைதான் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் 61 கிலோவிற்கு பதிலாக 65 கிலோ வரை எடை வைத்து கொள்முதல் செய்கின்றனர். மூட்டைக்கு 65 கிலோ என அதிக எடை வைப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
எனவே அதிக எடை வைக்கும் வியாபாரிகள் தராசுகளை பறிமுதல் செய்தும், கொள்முதல் செய்யும் நெல்லை அரசுக்கு வரி கட்டாமல் வெளியில் எடுத்துச் செல்வதாலும் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஒரு லாரிக்கு 100 மூட்டைக்கு மட்டும் செஸ் வரி செலுத்துகிறார்கள். மீதமுள்ள மூட்டைகளை வரி கட்டாமல் எடுத்துச் செல்கிறார்கள். எனவே தனியார் வியாபாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் கடந்த ஆண்டை விட கூடுதலாக அதிகளவில் வாடகை வசூலிப்பதாலும், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையினாலும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளி மாவட்டங்களில் உள்ள அரசு நெல் அறுவடை இயந்திரங்களை இவ்விரு தாலுக்காக்களிலும் உள்ள விவசாயிகள் நலன் கருதி நெல் அறுவடை இயந்திரங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் வரவழைத்து தர வேண்டும் என்கிறார் பி.விநாயகமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...