அண்ணாமலைப் பல்கலையில் மியான்மர் நாட்டு மாணவர்களுடன் சமத்துவ பொங்கல்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுத்துவ பொங்கல் விழாவில் மியான்மர் நாட்டு மாணவர்கள் பங்கேற்று


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுத்துவ பொங்கல் விழாவில் மியான்மர் நாட்டு மாணவர்கள் பங்கேற்று கொண்டாடினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத்துறையில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 20 பேர் முனைவர் பட்ட வகுப்பு பயின்று வருகின்றனர். தத்துவத்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக மாணவ, மாணவியர்களுடன் இணைந்து மியான்மர் நாட்டு மாணவர்களும் பொங்கல் பொங்கி, பொங்கல் வாழ்த்து சொல்லி கொண்டாடினர்.
இதுகுறித்து மியான்மர் நாட்டு மாணவர்கள் தெரிவித்தது: பாரம்பரியமிக்க கலைகள் கொண்ட இந்திய கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக தமிழக கலாச்சாரப்படி கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் நாங்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க பெருமை அடைகிறோம் என்றனர். பின்னர் வரலாற்றுத்துறை மற்றும் அரசியல் அறிவியல் துறையில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாணவர்கள் பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து கொண்டாடினர். மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள், உரியடி நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...