பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் போட்டி நடத்துபவர்கள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் போட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதுபோன்ற போட்டிகள் நடத்த அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால், நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபானம் விற்றால்...:
நபிகள் நாயகம் பிறந்த நாளான ஜனவரி 14, திருவள்ளுவர் தினமான ஜனவரி 15, வடலூர் ராமலிங்கனார் நினைவு தினமான ஜனவரி 17 ஆகிய தேதிகளில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட தேதிகளில் மதுபானம் விற்கக் கூடாது. இம் மூன்று தினங்களில் டாஸ்மாக் பார்களிலோ, பெட்டிக் கடைகளிலோ மதுபானம் பதுக்கி வைத்து விற்றால் 94896-15208 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...