வடக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் பசுபதி(20), ஒரத்தூரைச் சேர்ந்த கண்ணன்(60), ஒரத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெ. முருகையன்(38), பாப்பாக்கோவில், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த மு. நாகம்மாள்(50), செட்டிச்சேரியைச் சேர்ந்த து. வசந்தா(50) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒரத்தூர், சிக்கல்பத்து பகுதியைச் சேர்ந்த கா. முருகையன்(31) ஆகியோர் பலத்தக் காயமடைந்தனர். இதில், பா. பசுபதி, கண்ணன் ஆகிய 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த மற்ற 4 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.