பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அருகே கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக கொண்டாடிய கிராம மக்கள்

தனியார் தொழிற்சாலையான சைமா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே சுமார் 20 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக

News image
Updated On :15 ஜனவரி 2014, 12:01 pm

ஜி.சுந்தரராஜன்

தனியார் தொழிற்சாலையான சைமா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே சுமார் 20 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக கொண்டாடினர்.

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஜவுளிபூங்கா என்ற சைமா சாயத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான அப்பகுதியில் 12 ராட்ச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தினம் 1 கோடி லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து கடல்நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சைமா தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் 20 கிராம மக்கள் அதன் அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் கிராமத் தலைவர்கள் கருணைசெல்வம், லோகபரணி, அர்ச்சுணன், வாழ்முனி, கார்த்திகேயன், பிரேம்நாத், கதிர்வேலு, முருகன் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் அரசுக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கருப்பு பண்டிகையாக கொண்டாடுவதாக அறிவித்து பெரியப்பட்டு, வாண்டையார்பள்ளம், மடவாப்பள்ளம், ரெட்டியார்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.