பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: இரு எம்எல்ஏக்கள் பங்கேற்பு

கீழரதவீதியில் உள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வண்டிகேட் எம்ஜிஆர் சிலையை

News image
Updated On :17 ஜனவரி 2014, 12:31 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழரதவீதியில் உள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வண்டிகேட் எம்ஜிஆர் சிலையை அடைந்தனர். அங்கு எம்ஜிஆர் சிலைக்கு தோப்பு கே.சுந்தர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம் (புவனகிரி), முன்னாள் நகரமன்றத் தலைவர் எம்எஸ்என்.குமார், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், பொதுக்குழு உறுப்பினர் தில்லை ஏ.கே.சி.சேகர், தொகுதி துணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், எம்.ஜி.பாரி, நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.