சிதம்பரம் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரமத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் ராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிதம்பரமத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் ராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே விபூஷணபுரம் லலிதாம்பாள்நகரில் ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சத்திய ஞானசபையில் காலை 6.30 மணி, பகல் 1.30 மணி, இரவு 8 மணி ஆகிய 3 வேளையும் 7 திரைகள் விளக்கப்பட்டு ஜோதி காண்பிக்கப்பட்டது, திரளான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனத்தை கண்டு அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு தரிசித்தனர். விழாவை முன்னிட்டு ஜன.16,17 ஆகிய இரு தினங்களும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திருஅருட்கொடியை சத்திய ஞானசபை அறங்காவலர் குழுத் தலைவர் வி.கே.மாரிமுத்து ஏற்றி வைத்தார். இரண்டு நாட்களும் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்ற நிர்வாகி ஜெய.ராஜமூர்த்தி, முனைவர் வை.நமச்சிவாயம், முனைவர் டி.தில்லைநாயகம், ஜி.நடராஜன் உள்ளிட்டோர் ராமலிங்கள் அடிகளாரின் சிறப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.கே.மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் வி.விஜயராகவன், பாரத ஸ்டேட் வங்கி மூத்த அதிகாரி ராஜேந்திரன், திருநாரயணமூர்த்தி, உதவிப் பேராசிரியர் டி.எஸ்.எஸ்.ஞானகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...