தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்: தீக்குளிப்புப் போராட்டம் நடத்தத் திட்டம்?

இலங்கை சிறையிலிருந்து நாகை மீனவர்கள் 111 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் விசைப் படகுகளையும் விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப்

News image
Updated On :17 ஜனவரி 2014, 2:36 pm

சங்கர்

இலங்கை சிறையிலிருந்து நாகை மீனவர்கள் 111 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் விசைப் படகுகளையும் விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நாகையிலிருந்து 15 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கடந்த டிச. 11-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, திரிகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களுடன், இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும், அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த டிச. 11-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் 111 பேரையும் விடுதலை செய்து, திரிகோணலை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இருப்பினும், இந்த மீனவர்களின் 15 படகுகளை விடுவிப்பது தொடர்பாக எந்த வித அறிவிப்பையும் இலங்கை அரசு வெளியிடவில்லை.

இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டை மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், அக்கரைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இலங்கையிலிருந்து நாகை மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்க வலியுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீக்குளிப்புப் போராட்டம்?

படகுகள் விடுவிக்கப்படாததைக் கண்டித்து, சிறை மீண்ட 111 மீனவர்களின் குடும்பத்தினரும் சனிக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தீக்குளிப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீனவப் பஞ்சாயத்தாரின் ஆலோசனைகளை ஏற்காமல் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தன்னிச்சையாக இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் மீனவப் பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.