ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணிசங்கர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மணி சங்கர ஐயர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

News image
Updated On :18 ஜனவரி 2014, 9:43 am

சங்கர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மணி சங்கர ஐயர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இவரது அலுவலகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அபயம்மாள்புரம் என்ற இடத்தில் உள்ளது.இங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 மர்ம நபர்கள், பூட்டி கிடந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதில், அலுவலத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

இந்த சம்பவம் தொடர்பாக மணிசங்கர் அய்யர் ஆதரவாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எக்காலத்திலும் இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது என்றும், அவர் முன்னர் செய்து வந்த டீக்கடை தொழிலை வேண்டுமானால் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் செய்து கொள்ளலாம் என்றும் கிண்டலாகப் பேசியிருந்தார் மணி சங்கர ஐயர். இதனிடையே அவருடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தது. இருப்பினும் அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற முடியாது என்றும், மன்னிப்புக் கோர முடியாது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறையில் உள்ள அவரது அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.