புதிய திரைப்பட சிடிக்கள் பறிமுதல்: ஒருவர் கைது
சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சனிக்கிழமை சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள அம்மன் வீடியோ கடையை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதிய


சிதம்பரம் நகரில் விற்பனைக்கு வைத்திருந்த புதிய திரைப்பட சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வீடியோ கடை உரிமையாளர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சனிக்கிழமை சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள அம்மன் வீடியோ கடையை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதிய திரைப்படங்களான பிரியாணி, வீரம், ஜில்லா உள்ளிட்ட 11 புதிய திரைப்படங்களின் 79 சிடிக்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் மகேஷை கைது செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...