ஊராட்சித் தலைவருக்கு வெட்டு: செயலர் உள்பட 2 பேர் கைது
திருக்கோவிலூரை அடுத்த டி.கே.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. கீரனூர் ஊராட்சித் தலைவராக உள்ளார். இதேப் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவக்குமார். ஊராட்சி செயலர். ஊராட்சி


திருக்கோவிலூர் அருகே சம்பள பாக்கி தகராறில் ஊராட்சித் தலைவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக செயலர் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூரை அடுத்த டி.கே.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. கீரனூர் ஊராட்சித் தலைவராக உள்ளார். இதேப் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவக்குமார். ஊராட்சி செயலர். ஊராட்சி நிர்வாகம் செய்வது சம்மந்தமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சித் தலைவருக்கான அதிகாரம் பறிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் சிவக்குமாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சித் தலைவர் மணிக்கு, தலைவருக்கான அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. ஊராட்சி செயலர் சிவக்குமார் பணி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு ஆவியூர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் கீரனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிவக்குமாருக்கு 6 மாத சம்பளம் பாக்கி இருந்து வந்தது. இதை ஊராட்சித் தலைவரிடம் கேட்டுள்ளார். ஆனால் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சனிக்கிழமை இரவு சிவக்குமாருக்கும், மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கிக் கொண்டனர்.இந்த மோதலில் ஊராட்சித் தலைவர் மணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவரும், படுகாயமடைந்த ஆதரவாளர்கள் காமராஜ், ராமலிங்கம், ரகோத் ஆகியோர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெகநாதன் பாலமுருகன், சிவக்குமார், தந்தை சண்முகம், மாமியார் மல்லிகா ஆகியோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மணி உறவினர் ஜெகநாதன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊராட்சி செயலர் சிவக்குமார் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், வெண்ணிலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதே பிரச்சனை தொடர்பாக ஊராட்சி செயலர் சிவக்குமார் உறவினர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், ஊராட்சித் தலைவர் மணி உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதையடுத்து, பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...