பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலை பேசி வருகிறது: ராமதாஸ்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலை பேசி வருகிறது. வாக்குகள் விற்பனைக்கு அல்ல என வீடுகளில் மக்கள் எழுதி வைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்

News image
Updated On :19 ஜனவரி 2014, 12:26 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலை பேசி வருகிறது. வாக்குகள் விற்பனைக்கு அல்ல என வீடுகளில் மக்கள் எழுதி வைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சிதம்பரம் வடக்குமெயின் ரோடு பைசல் மஹாலில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி சமூக சனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணன் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் ரா.கோவிந்தசாமி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் வரவேற்றார். கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், அரியலூர் மாவட்டச் செயலாளர் வைத்தி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

பாமக, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நாண் எந்த சமுதாயத்தையும் எதிரியாக பார்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அனைவரும் அமைதி காத்து அறிவை பயன்படுத்தி பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் வர இனனும் 3 மாதங்களே உள்ளன. அதற்குள் நம்மை சிறைக்கு அனுப்பினாலும் அனுப்புவார்கள். இரண்டரை கோடி வன்னியர்கள் எனது பேச்சை கேட்டு நடந்தால் நம் சமூக பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். ஜன.20-ம் தேதி சென்னையில் அனைத்து சாதி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதை சில ஊடகங்கள் கேலி செய்கிறது. வன்னியர் சமுதாய மக்களுடன், அனைத்து சமுதாய மக்களிடம் வாக்கு கேட்கிறேன்.

47 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 10வது இடத்தில் பின்னோக்கி உள்ளது. இந்தியாவில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நபர் மீதும் ரூ.25 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் 13 லட்சமாக இருந்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக குறைத்து, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலங்களில் 1 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வன்னியர்கள் தங்களது வீடுகள் முன்பு 'எங்கள் வீட்டில் 4 வாக்குகள் உள்ளது. வாக்குகள் விற்பனைக்கு அல்ல. யாரும் விலை பேச எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம்' என அனைவருக்கும் தெரியும்படி பதாகையில் எழுதி ஓட்டி வைக்க வேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்தார்.

கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் கு.தேவதாஸ் படையாண்டவர், சிலம்புச்செல்வி, சின்னதுரை, முதனை செல்வராஜ், பெரம்பலூர் பாலு, வழக்குரைஞர் மகேந்திரன், ஜெய.சஞ்சீவி, ஆறு.கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் நகரச் செயலாளர் முத்து.குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.