சிதம்பரம் காவல்நிலையத்தில் டிஐஜி முருகன் திடீர் ஆய்வு
சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு விழுப்புரம் சரக டிஐஜி முருகன் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வருகை தந்தார்.


சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு விழுப்புரம் சரக டிஐஜி முருகன் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வருகை தந்தார்.
விழுப்புரம் சரக டிஐஜி முருகன் செவ்வாய்க்கிழமை காலை கடலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் டிஐஜி முருகன் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வருகை தந்து திடீர் விசிட் செய்தார். அப்போது டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி ஆகியோரிடம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசினார். பின்னர் நகர காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...