ஆசிட் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஈஸ்வரன்கோயில் வீதியை சேர்ந்தவர் பாபு என்ற சம்சுதீன்(54). இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை ரகமத்நிஷா(50) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைக்கு(டெய்லர்) சென்ற அவர், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவாராம்.
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட பாபு என்ற சம்சுதீன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டுக்கு சென்ற அவர் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்காமலேயே வெளிநாட்டிலிருந்து திடீரென சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்று இரவு ரகமத் நிஷாவை அடித்து உதைத்த அவர், திடீரென உடலில் பல இடங்களில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனிக்காத நிலையில் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி ரகமத் நிஷா உயிரிழந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாபு என்ற சம்சுதீனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி எஸ்.சுபாதேவி, குற்றம்சாட்டப்பட்ட பாபு என்ற சம்சுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.நந்தகுமார் ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

