அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

விபத்து: திரையரங்கு காவலாளி சாவு

பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்தவர் முத்தையா (75). இவர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள திரையரங்கில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு பணி முடிந்ததும், தனது

News image
Updated On :24 ஜனவரி 2014, 12:19 pm

முத்துகுமார்

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் திரையரங்கு காவலாளி இறந்தார்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்தவர் முத்தையா (75). இவர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள திரையரங்கில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு பணி முடிந்ததும், தனது உறவினர்கள் சிலருடன் எஸ்.என்.சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.